பொதுவாகவே நாம் சமைக்கும்போது சில உணவுகளில் உப்பு அதிகமாகிவிடும். அந்த உணவுகள் வீணாக்க நேரிடும். எனவே சமையலில் தவறுதலாக உப்பு அதிகமாகிவிட்டால் அதனை எப்படி சரி செய்வது என்பது குறித்த இதில் பார்க்கலாம்.

அதன்படி குழம்பு வகைகளில் உப்பு அதிகமாகி விட்டால் பச்சை உருளைக்கிழங்கு துண்டுகளை வெட்டி சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க விட்டு இறங்கினால் உப்பு குறைந்து விடும். அதனைப் போலவே உப்பு அதிகமான குழம்பில் உருளைக்கிழங்கு துண்டுகளை போட்டு 20 நிமிடங்கள் ஊறவிட்டு அதன் பிறகு அந்த உருளைக்கிழங்கை வெளியில் எடுத்து விட்டாலும் உப்பு குறையும். வருவல்களில் உப்பு அதிகமாகிவிட்டால் கோதுமை மாவு அல்லது கடலை மாவு உருண்டைகளை உருட்டி அதில் போட்டு 20 நிமிடங்களுக்கு பிறகு அந்த உருண்டைகளை எடுத்துவிட்டால் உப்பு சமமாகிவிடும். வருவல்களில் உப்பு அதிகமாகி விட்டால் தேங்காய் துருவல் சேர்க்கலாம் அல்லது முட்டை சேர்த்து கிளறி விடலாம்.

இந்திய, முகலாய் மற்றும் சைனீஸ் உணவுகளில் உப்பு அதிகமாகிவிட்டால் எலுமிச்சையை அதற்கு பயன்படுத்தலாம். அதனைப் போலவே சாதத்தில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து விட்டால் அதிக உப்பை உறிஞ்சி சமநிலைப்படுத்தி விடும். காய்கறிகளில் உப்பு அதிகமாகி விட்டால் அதனுடன் ஒரு தேக்கரண்டி தயிர் சேர்க்கலாம். சேர்த்த பிறகு ஐந்து நிமிடங்கள் சமைத்தால் உப்பு சரி செய்து விடும். பருப்பு அல்லது காய்கறிகளில் உப்பு அதிகமாகி விட்டால் வேகவைத்த மூன்று உருளைக்கிழங்கை சேர்க்கலாம். அதனைப் போலவே உப்பு தன்மையை குறைப்பதற்கு ஒரு சிட்டிகை சர்க்கரையும் சேர்க்கலாம். குழம்பில் உப்பு அதிகமாகி விட்டால் தக்காளியை மிக்ஸியில் அரைத்து குழம்பில் சேர்த்து கொதிக்க வைக்கலாம் அல்லது தக்காளியை துண்டுகளாக சேர்க்கலாம் இது குழம்பில் உள்ள உப்பை சரி செய்து விடும்.