பொதுவாக விழாக்காலங்களில் வாழைமரம் கட்டுவது வழக்கம். இப்படி வாழைமரம் கட்டுவது எதற்காக என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.அதிகப்படியாக கூட்டம் சேரும்போது அவர்களின் உடலில் உஷ்ணம் மற்றும் வியர்வை ஒன்றாக சேரும். இதனால் ஒரு விதமான மூச்சு அடைப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம். எனவே, இவற்றிற்கு தீர்வாகத்தான் வாழை மரங்கள் சுப நிகழ்ச்சிகளில் கட்டுப்படுகிறது.

மேலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நோய் தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது அவற்றை தடுக்கவும் வாழைமரம் கட்டப்படுகிறது. இது மட்டும் இன்றி வீட்டில் விசேஷம் அல்லது நல்ல காரியங்கள் நடைபெறும் சமயத்தில் வீட்டிற்கு எந்த விதமான கண் திருஷ்டியும் ஏற்படக்கூடாது என்பதற்காக வாழைமரம் வாசலில் கட்டப்படுகிறது.