
தற்போது கிரெடிட் கார்டின் பயன்பாடு இந்தியா முழுவதும் அதிகரித்துவிட்டது. பலரும் ஒன்றுக்கு மேற்பட கிரெடிட் கார்டு வைத்திருக்கிறார்கள். இது ஒரு சிறந்த நிதி சார்ந்த கருவி. இது வாடிக்கையாளர்கள் கூடுதல் செயல்முறை அல்லது தொந்தரவு இல்லாமல் வங்கியில் முன்கூட்டியே கடன் பெற உதவுகிறது. இதன் மூலமாக நம்முடைய தினசரி செலவுகளை நிர்வகிக்கலாம். கிரெடிட் கார்டு மூலமாக சிறந்த கடன் வரலாற்றை உருவாக்கலாம். அதேபோல கிரெடிட் கார்டு பயன்படுத்தும் பொழுது பல வெகுமதிகளும், நன்மைகளும் நமக்கு கிடைக்கிறது.
ஒரு சிலர் இதை வைத்திருந்தாலும் நீண்ட நாட்களுக்கு பயன்படுத்துவது இல்லை. அத்தகைய சூழலில் கிரெடிட் கார்டுகள் செயலிழந்து விடும். இதில் வங்கி பரிமாற்றங்கள், முன்பணம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளும் அடங்கும். கிரெடிட் கார்டு செயலிழந்தால் அடுத்து கடன் வாங்கும்போது சிக்கல்களை உருவாக்கலாம். வங்கிகள் கிரெடிட் கார்டு நீண்ட காலமாக செயல்படாமல் இருந்தால் அதை மூடிவிடும். இது கடன் வரலாற்றை பாதிக்கலாம்.
உங்களுடைய கிரெடிட் கார்டை மீண்டும் இயக்குவது சுலபம்தான். அதாவது கிரெடிட் கார்டை வழங்கும் நிறுவனம் கார்டு செயலிழந்தால் அதை மீண்டும் செயல்படுத்த சில நாட்கள் கால அவகாசம் அளிக்கும். உங்களுடைய டோர் மேட் கிரெடிட் கார்டு மீண்டும் செயல்படுத்துவதற்கு பக்கத்தில் உள்ள வங்கி கிளை அல்லது ஆன்லைன் சேவை போர்ட்டலை பார்வையிடலாம். சில வங்கிகள் அடையாள சான்றிற்காக புதுப்பிக்கப்பட்ட kyc விவரங்களை கேட்கலாம். நீங்கள் பரிவர்த்தனை செய்யும்போது சில வங்கிகள் தானாகவே செயல்படாத கிரெடிட் கார்டுகளை செயல்படுத்தி விடும்.