தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதேசமயம் பொதுவிநியோகத் திட்ட பொருட்கள் கடக்கல் மற்றும் பதுக்கள் தொடர்பான குற்றங்களும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் இது தொடர்பாக புகார்களை கட்டணம் இல்லாத தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதன்படி பொதுமக்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டுள்ள பொது விநியோகத் திட்ட பொருட்களை கடத்துவது மற்றும் பதுக்குவது குற்றமாகும்.

இந்த குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் மீது கள்ளச் சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையா பண்டங்கள் சட்டம் 1980 இன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். பொது விநியோக திட்ட பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்குதல் தொடர்பான புகார்களை 18005995950என்ற கட்டணம் இல்லாத தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.