இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனின் அடையாள ஆவணமாக ஆதார் அட்டை உள்ளது. பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதார் கார்டில் பெயர் மற்றும் முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அப்டேட் செய்ய வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதேசமயம் மொபைல் எண் மாற்றம் செய்யப்படும்போது மொபைல் எண்ணையும் ஆதார் எண்ணுடன் கட்டாயம் இணைக்க வேண்டும். தற்போது ஆதார் அட்டை தொலைந்து விடும்போது எவ்வாறு ஆன்லைன் மூலம் எளிதில் ஆதார் அட்டை பெறுவது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

அதற்கு முதலில் https://myaadhaar.uidai.gov.in/portal என்ற இணையதள பக்கத்திற்கு சென்று உங்களுடைய ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும். பிறகு உங்களுடைய மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும் ஓடிபி பதிவு செய்து pdf ஆக உங்களது ஆதார் கார்டை டவுன்லோட் செய்து கொள்ளலாம். ஆதார் அட்டை பெறுவதற்கு UIDAI இணையதளம் அல்லது மை ஆதார் செயலி மூலம் ஆர்டர் செய்யலாம். ஆர்டர் செய்த ஐந்து முதல் ஏழு நாட்களுக்குள் உங்களுக்கு ஆதார் அட்டை வழங்கப்படும். ஆதார் அட்டையை தொலைத்தவர்கள் உடனடியாக இந்த இணையதள பக்கத்தின் மூலம் விண்ணப்பித்த புதிய ஆதார் அட்டையை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.