இந்தியாவில் அனைத்து மாநில அரசுகளும் பெண் குழந்தைகளின் நலனுக்காக ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருவது மட்டுமல்லாமல் பல சலுகைகளையும் வழங்கி வருகின்றன. அதன்படி உத்திரபிரதேசம் மாநிலத்தில் கன்யா சுமங்கலா யோஜனா என்ற திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகள் பிறந்தது முதல் பட்டப்படிப்பு முடிக்கும் வரை 25 ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. என்ன திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகளுக்கு ஆண்டுக்கு 15 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அந்த மானியம் 25 ஆயிரம் ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

அதே சமயம் 2025 ஆம் ஆண்டு முதல் ஆறு கட்டங்களாக இந்த தொகை வழங்கப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது. அதாவது பெண் குழந்தை பிறந்தது ஐந்தாயிரம் ரூபாய், ஒரு வயது ஆகும்போது 2000 ரூபாய், முதல் வகுப்பிற்கு சென்றதும் 3000 ரூபாய், ஆறாம் வகுப்பில் 3000 ரூபாய், ஒன்பதாம் வகுப்பில் 5 ஆயிரம் ரூபாய் மற்றும் பட்டப்படிப்பு முடிக்கும்போது 7000 ரூபாய் என மொத்தமாக 25 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஒரு குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் வரை இந்த திட்டத்தின் கீழ் பயன்படலாம் எனவும் அரசு தெரிவித்துள்ளது.