இந்தியாவில் வங்கி கணக்குகளை விட போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு கணக்குகள் குறைந்த முதலீட்டில் அதிக லாபத்தை தருகிறது. இந்த சேமிப்பு கணக்குகளில் சேமிக்கப்படும் பணத்துக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் வட்டியும் செலுத்தப்படும். இவ்வாறு செலுத்தப்படும் வட்டியின் சதவீதம் வங்கியின் வட்டி விகிதத்தை விட அதிகமாகும். இந்த வங்கியில் கணக்கு தொடங்கும் நபர்கள் 500 ரூபாய் இருப்பு தொகை வைத்திருக்க வேண்டும். ஒரு நபரின் பெயரில் ஒரு கணக்கு மட்டுமே தொடங்க முடியும். இருந்தாலும் பயனர்களுக்கு தேவை இருந்தால் ஒரு கூட்டு கணக்கை அல்லது தனது பெயரை பாதுகாவலராக இணைத்து மற்றொரு கணக்கையும் தொடங்கலாம்

அவ்வாறு புதிய கணக்கு தொடங்கும் போது குறைந்தது 500 ரூபாய் செலுத்தி சேமிப்பு கணக்கை திறக்க வேண்டும். மேலும் பாஸ் புக்குக்கு 50 ரூபாய், கணக்கு அறிக்கையில் அல்லது டெபாசிட் ரசீதுகளை பெற 20 ரூபாய், கணக்கு பரிமாற்றம் மற்றும் கணக்கு உறுதிமொழிகளுக்கு தலா 100 ரூபாய் என செலுத்த வேண்டும். கணக்குகளை திறந்த பின்னர் ஒரு வருடத்தில் பத்து செக் புக் கட்டணம் இல்லாமல் பயன்படுத்திக் கொள்ளலாம். அதன் பிறகு ஆண்டுக்கு இரண்டு ரூபாய் கட்டணமாக நீங்கள் செலுத்த வேண்டி இருக்கும். அதேசமயம் நாமினியின் பெயரை மாற்ற அல்லது ரத்து செய்வதற்கு 50 ரூபாய் நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டும்.