இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப் போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டதால் ஆதார் கார்டில் உள்ள அனைத்து விவரங்களையும் எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும். பொதுவாக அனைத்து இடங்களிலும் 12 இலக்க ஆதார் எண்ணை பதிவு செய்வதை நிறுத்த வேண்டும். இதற்கு முதலில் myaadhaar செயலி மூலமாக ஆதார் எண்ணை லாக் செய்யலாம்.

தற்போது உங்களுடைய ஆதார் எண்ணை பாதுகாப்பாக எப்படி லாக் செய்ய வேண்டும் என்பதை இதில் தெரிந்து கொள்ளலாம். இதற்கு முதலில் என்ற இணையதள பக்கத்திற்கு சென்று ஆதார் பூட்டு மற்றும் திறத்தல் சேவைகள் என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு UID லாக் ரேடியோ என்ற பகுதியை கிளிக் செய்து UID எண், முழு பெயர் மற்றும் பின் குறியீட்டை பதிவு செய்த பிறகு பாதுகாப்பு குறியீட்டை உள்ளிட்டு ஓடிபி என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு TOTP என்பதை தேர்ந்தெடுத்து சமர்ப்பி என்பதை கிளிக் செய்தால் உங்களுடைய ஆதார் எண் லாக் செய்யப்பட்டு விடும். நீங்கள் உங்கள் ஆதார இப்போது பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம்.