இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. இந்த நிலையில் உங்கள் குழந்தைகளுக்கு ஆதார் கார்டு எடுக்க பிறப்புச் சான்றிதழ் நகல் எடுத்து அருகில் உள்ள ஆதார் பதிவு மையத்தில் ஆதார் பதிவு படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.

அதன் பிறகு ஆதார் பதிவு மையத்தில் உங்களது குழந்தையின் புகைப்படத்தை எடுப்பார்கள். மேலும் பெரியவர்களுக்கு எடுப்பது போல குழந்தைகளுக்கு அவர்களின் கைரேகைகள் மற்றும் விழித்திரை ஸ்கேன் எடுக்க மாட்டார்கள். அதற்கு பதில் பெற்றோர்களின் அடையாளம் ஆவணத்தைக் காட்டி கைரேகையை எடுத்துக் கொள்வார்கள். புதிய ஆதார் கார்டு விண்ணப்பிக்கும் பணி முடிந்து விடும். அதன் பிறகு சில நாட்கள் கழித்து UIDAI இணையதளத்தில் இருந்து உங்களது குழந்தையின் ஆதார் அட்டையின் டிஜிட்டல் நகலை நீங்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.