ஆசிய விளையாட்டு பேட்மின்டன் போட்டியில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது.

2022 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா தனது 100 பதக்கங்களைப் பெற்று வரலாறு படைத்துள்ளது. இந்தியா 25 தங்கம் 35 வெள்ளி 40 வெண்கலம் வென்று நூறு பதக்கங்களை எட்டி உள்ளது. இந்தியாவின் சாதனைக்கு நமது விளையாட்டு வீரர்களின் கனவுகள், அர்ப்பணிப்பு மற்றும் குழுப்பணி ஆகியவற்றின் சக்திக்கு இது ஒரு சான்று.இந்த சாதனை வருங்கால தலைமுறைகளுக்கு உத்வேகம் அளிக்கும். கடின உழைப்பு மற்றும் ஆர்வத்துடன், எதுவும் சாத்தியம் என்பதை இது காட்டுகிறது.

இந்நிலையில் ஆசிய விளையாட்டு பேட்மின்டன் போட்டியில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. இரட்டையர் பேட்மிண்டனில் சாத்விக்/சிராக் ஆகியோர் தங்கம் வென்றனர். பேட்மிண்டன்: ஆடவர் இரட்டையர் பிரிவில் கொரிய ஜோடியை 21-18, 21-16 என்ற செட் கணக்கில் வீழ்த்தி சாத்விக்/சிராக் தங்கப் பதக்கம் வென்றனர். இந்தியா 101 பதக்கங்களை வென்றுள்ளது.