இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது புதிய வகையில் மோசடி செய்ய தொடங்கியுள்ளனர். அதாவது எஸ்பிஐ வெகுமதி என்ற பெயரில் whatsapp மற்றும் குறுஞ்செய்திகளை அனுப்பி மக்களிடம் பணம் பறித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் sbi வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி உங்கள் எஸ்பிஐ ரிவார்டு 7,250 ரூபாய் ஆக்டிவேட் செய்யப்பட்டுள்ளது என எந்த செய்தியையும் திறக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெகுமதி புள்ளிகள் தொடர்பான எந்த இணைப்புகளையும் அவர்கள் அனுப்ப மாட்டார்கள் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.