தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதனை தொடர்ந்து ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று குடும்ப கலவிகளுக்கு உரிமை தொகை டோக்கன் மற்றும் விண்ணப்பங்களை வழங்கி வருகிறார்கள்.

தற்போது தகுதி உள்ள குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முதியோர் மற்றும் கைம்பெண் மகள் இருக்கும் 1200 ரூபாய் உதவித்தொகை வழங்க இருப்பதாக தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அத்துடன் மாற்றுத்திறனாளிகளுக்கு ஓய்வூதியம் தற்போது 1200 ரூபாயாக உயர்த்தப்பட இருப்பதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். தமிழக முழுவதும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை காண விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதற்கு 35 ஆயிரத்து 925 முகாம்கள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.