தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் மூலம் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்காக தற்போது வீடு வீடாக சென்று மக்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனைத் தொடர்ந்து விண்ணப்ப பதிவிற்கான சிறப்பு முகாம் வருகின்ற ஜூலை 24ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது.

இந்நிலையில் வழங்கப்படும் டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நேரம்,இடம் மற்றும் நாள் ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதிவு நடைபெற உள்ளது. விண்ணப்ப பதிவுக்கு வரும் மக்கள் அனைவரும் தங்களின் ஆதார் இணைத்த வங்கி கணக்கு புத்தகத்தை கட்டாயம் கொண்டு வர வேண்டும்.

வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு முகாம் நடைபெறும் இடத்திலேயே வங்கி கணக்கு தொடங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களுடன் வந்தால் மட்டுமே மகளிர் உரிமைத்தொகை காண விண்ணப்பம் பதிவு செய்யப்படும் என தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.