
இன்றைய தலைமுறையினர் மற்றும் முக்கிய பிரபலங்கள் பலரும் தங்களுடைய வாகனங்களுக்கு பேன்சி நம்பர் பிளேட் வாங்குவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். இத்தகைய பேன்சி நம்பர் பிளேட்டுகளை ஆன்லைனில் புக் செய்வதன் மூலம் எளிதாக பெற்றுக் கொள்ளலாம். அதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து தற்போது பார்ப்போம். அதன்படி முதலில் பொது பயனரக சாலை மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
பின்னர் நீங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகே உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை தேர்வு செய்து உங்களுக்கு பிடித்தமான பேன்சி நம்பர் பிளேட்டை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் அதற்கு உரிய கட்டணத்தை செலுத்த வேண்டும். இதைத்தொடர்ந்து பேன்சி நம்பர் பிளேட்டுகளுக்கான ஏலத்தில் கலந்து கொள்ளலாம். அங்கு நம்பர் பிளேட்டை வாங்குவதற்கான ஏலத்தை அதிகரிக்க செய்ய வேண்டும். அதற்கான தொகையை செலுத்தி நம்பர் பிளேட் கிடைப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மேலும் இதை செய்தாலே உங்களுக்கான நம்பர் பிளேட் கிடைத்துவிடும்.