மத்திய அரசு ஒரு புதிய சமூக நலத் திட்டத்தை அறிவித்துள்ளது. பெண்களுக்கான ஏராளமான சிறப்பு திட்டங்களைப் போலவே, தற்போது ஆண்களுக்கும் நிவாரணம் கிடைக்கும் வகையில் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் திருமணமாகாத (Unmarried Men) மற்றும் மனைவியை இழந்த (Widowed Men) ஆண்களுக்கு மாதம் ரூ.5,000 வரை பென்ஷன் அளிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த புதிய திட்டத்திற்குத் தகுதியுடையவர்களாக, இந்திய குடிமக்கள் இருக்க வேண்டும். மேலும், அவர்களிடம் ஆதார் அட்டை, வருமான சான்றிதழ், ரேஷன் அட்டை ஆகியவை கட்டாயம் இருக்க வேண்டும். மனைவியை இழந்தவர்களுக்கு இறப்பு சான்றிதழும் தேவைப்படும். குறைந்த வருமானம் கொண்ட ஆண்கள் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்களாக கருதப்படுவர்.

இந்த திட்டத்திற்கான ஆன்லைன் விண்ணப்பத்தை மாநில சமூக நலத்துறை (State Social Welfare Department) இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யலாம். அங்கு ‘Widowed Men’ என்று குறிப்பிட்டுள்ள திட்டத்தில் பூர்த்தி செய்யும் விண்ணப்பம் வழியாக, உரிய ஆவணத்துடன் பதிவுசெய்தால் போதும்.

இந்த அறிவிப்பு மூலம், பெண்கள் போல் ஆண்களும் அரசு நலத்திட்டங்களில் கவனிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையை உருவாக்கியுள்ளது. இத்தகைய திட்டம், சமூக சமத்துவத்துக்கு ஒரு நல்ல ஆரம்பமாக அரசியல் வட்டாரங்களில் பாராட்டப்படுகிறது.