பான் எனப்படும் நிரந்தர கணக்கு எண் 10 இலக்கு கொண்ட எண்ணெழுத்து ஐடி ஆகும். இது இந்தியர்களுக்கான முக்கிய சட்ட அடையாள அட்டையாக இருக்கிறது. பல வித பணப் பரிவர்த்தனைகளுக்கு பான்கார்டு அவசியம். வருமான வரித் துறைக்கு இது உங்களின் முக்கியமான ஆவணம் ஆகும்.

எனினும் உங்களிடம் ஒரே ஒரு பான் கார்டு மட்டும் இருப்பது மிகவும் முக்கியம் ஆகும். 2 பான் கார்டுகளை வைத்திருக்க யாருக்கும் அனுமதியில்லை. இருப்பினும் 2 பான் கார்டுகளுடன் பிடிபட்டால், வருமான வரித்துறை உங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. வருமான வரித்துறையின் விதிகளின் படி, ஒன்றுக்கு மேற்பட்ட பான் எண்ணை வைத்து இருந்தால் ரூ.10,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.