நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதேசமயம் அரசு வழங்கும் நிதி உதவிகளை பெறுவதற்கும் ரேஷன் கார்டு அவசியமாகும். இந்நிலையில் மோசடி கும்பல் தற்போது ரேஷன் கார்டு தாரர்கள் நோக்கி காய்களை நகர்த்த ஆரம்பித்துள்ளனர்.

அதில் மொபைல் போனுக்கு மெசேஜ் செய்து அதில் வரும் லிங்கை கிளிக் செய்ய சொல்கிறார்கள். அந்த லிங்கை கிளிக் செய்தாலே உங்களது தகவல்கள் திருடப்படலாம். அதிக ரேஷன் கிடைக்க உறுப்பினர் நீக்கப்பட்டு விட்டனர், கேஒய்சி அப்டேட் செய்ய என விதவிதமான தலைப்புகளில் மெசேஜ்கள் வருகிறது. இதனை நம்பி மக்கள் யாரும் ஏமாற வேண்டாம் என அரசு எச்சரித்துள்ளது.