இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. ஆதார் எண்ணை பயன்படுத்தி பயனர்களின் சுய விவரங்களை யார் வேண்டுமானாலும் எளிதில் பெற முடியும். ஆதார் அட்டையின் இந்த வசதி மூலமாக சிலர் மோசடி விஷயங்களையும் சட்டவிரோத செயல்களையும் செய்து வருகின்றனர். இந்த மோசடிகளில் இருந்து தனது பயனர்களைக் காக்க ஆதார் நிறுவனம் பயோமெட்ரிக் லாக் என்ற புதிய வழிமுறையை அறிமுகம் செய்துள்ளது.

இந்த வசதியை பயன்படுத்தி பயனர்கள் தங்களுடைய பயோமெட்ரிக்கை எளிதில் பூட்ட அல்லது திறக்க முடியும். தனது பயோமெட்ரிக்கை பூட்ட விரும்பும் பயனர்கள் UIDAI நிறுவனத்தின் வலைதள பக்கத்தில் என்பதை கிளிக் செய்து பாதுகாப்பு குறியீடு மற்றும் ஆதார் எண்ணை பதிவிட்டு ஓடிபி உள்ளீடு செய்ய வேண்டும். பிறகு திரையில் தோன்றும் பக்கத்தில் enable என்பதை கிளிக் செய்தால் பயோமெட்ரிக் பூட்டப்படும். Disable என்ற கிளிக் செய்தால் பயோமெட்ரிக் திறக்கப்படும்.