உக்ரைன் ரஷ்யா கடலோர பகுதியில் புயல் வீசி உள்ளது. இதனால் கிருமியா ரஷ்யா மற்றும் உக்ரைனை சேர்ந்த ஐந்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் மின்சார வசதி இன்றி தவித்து வருகின்றனர். புயல் காரணமாக மரங்கள் தூக்கி வீசப்பட்டு மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டதாக ரஷ்ய ஊடகம் மற்றும் உக்ரைன் அமைச்சகம் தகவல்கள் வெளியிட்டுள்ளது.

இந்த புயலால் ஒன்றரை லட்சம் வீடுகளுக்கு மின்சார வசதி துண்டிக்கப்பட்டு இரண்டாயிரத்திற்கும் அதிகமான நகரங்கள் இருளில் மூழ்கியுள்ளது. மேலும் மூன்று பேர் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.