உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் சமீபத்தில் இஸ்ரேல் சென்றுள்ளார். அங்கு அவர் அதிபர் மற்றும் பிரதமரை சந்தித்ததோடு பயங்கரவாத தாக்குதலுக்குள்ளான பகுதிகளையும் பார்வையிட்டார். அதன் பிறகு பிணைய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்தித்து எலான் மஸ்க் ஆறுதல் கூறினார்.

அப்போது பிணைய கைதிகளின் குடும்பத்தை சேர்ந்த ஒருவர் “எங்கள் மனம் காசாவில் உள்ள பிணையக் கைதிகளை நினைத்துக் கொண்டுள்ளது” என்று எழுதப்பட்ட டாலரை எலான் மஸ்க்கிற்கு கொடுத்தார். அதனைப் பெற்று தனது கழுத்தில் போட்டுக் கொண்ட எலான் மஸ்க் காசாவில் இருந்து பிணைய கைதிகளை அனைவரும் விடுதலையாகும் வரை இதனை தான் கழுத்தில் அணிந்திருக்க போவதாக கூறியுள்ளார்.