
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அமரம்பேடு பகுதியில் தனியார் தொழிற்சாலை செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் தீடிரென இந்த தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. வினோத் என்பவர் பெயிண்ட் டப்பாக்களை ஸ்க்ரப்பாக்கும் தொழிற்சாலையை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இவரது தொழிற்சாலையில் மின் கசிவு காரணமாக தீடிரென தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.
இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த நிகழ்வு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.