
ஈரோடு மாவட்டம் குலமன்கோட்டை செல்வம் நகர் பகுதியில் தனியார் கட்டுமான நிறுவன மேற்பார்வையாளரான சிவா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி சத்யா என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் மகளும் இருக்கிறார்கள். இவர்களின் மகன் ஆதித்யாவுக்கு 17 வயது ஆகும் நிலையில் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தான். இந்த சிறுவன் நேற்று முன்தினம் ஸ்கூலுக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து கிளம்பிய நிலையில் ஸ்கூலுக்கு போகவில்லை. அதே நாள் மாலை நேரத்தில் சீருடை இல்லாமல் சாதாரண உடையில்ஆதித்யா மயங்கி நிலையில் கிடந்த நிலையில் அதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஆதித்யாவை மீது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே ஆதித்யா உயிரிழந்துவிட்டதாக கூறிவிட்டனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் மாணவர்கள் சிலர் ஆதித்யாவை அடித்துக் கொலை செய்தது தெரிய வந்தது. அதாவது கடந்த சில நாட்களுக்கு முன்பாக தங்கள் வகுப்பில் படிக்கும் ஒரு மாணவிகளுடன் பேசக்கூடாது என ஆதித்யாவை மாணவர்கள் மிரட்டிய நிலையில் தொடர்ந்து மாணவன் பேசியதால் ஆத்திரத்தில் ஆதித்யாவை அடித்து கொலை செய்துள்ளனர்.
இந்த வழக்கில் இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் உறவினர்கள் வீடியோவை பார்க்கும் போது 10 பேர் சேர்ந்து அடித்ததாக தெரிகிறது எனவே அனைத்து மாணவர்களையும் கைது செய்வதோடு அவர்களது பெற்றோர்களையும் வரவழைக்க வேண்டும் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் போலீசார் இரண்டு பேர் அடித்து கொலை செய்ததாக கூறிய நிலையில் இந்த வழக்கில் வேறு யாரும் எனும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இதற்கிடையில் மாணவனின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது சிவா தன் மனைவி சத்யாவுடன் தீக்குளிக்க போவதாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பேச்சுவார்த்தை மூலம் போலீசார் அவர்களை சமாதானப்படுத்திய நிலையில் பிரேத பரிசோதனைக்கு பிறகு மாணவனின் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.