காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் நேற்று முன்தினம் காலமானார். நேற்று அவருடைய உடல் தகனம் செய்யப்பட்டது. இதன் காரணமாக தற்போது ஈரோடு கிழக்கு தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. முன்னதாக அந்த தொகுதியில் அவருடைய மூத்த மகன் திருமகன் ஈவெரா போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் அவர் உடல் நலக்குறைவினால் கடந்த வருடம் உயிரிழந்தார்.

அதன் பிறகு அந்த தொகுதியில் அவருடைய இளைய மகனை போட்டியிட வைக்க ஈவிகேஎஸ் இளங்கோவன் விரும்பிய நிலையில் அதற்கு காங்கிரஸ் சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால் அவரே வேட்பாளராக களம் இறங்கினார். தற்போது அவர் இறந்துவிட்டதால் அந்த தொகுதியில் அவருடைய இளைய மகன் சஞ்சய் சம்பத் போட்டியிட அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.