வருகிற பிப்ரவரி 27-ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மொத்தம் 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பு வந்த உடனே அரசியல் கட்சியினர் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியை வீடுவீடாக சென்று மேற்கொண்டுள்ளனர். மேலும் வெளியூர்களில் வசித்து வரும் வாக்காளர்கள் மற்றும் அவரது தொலைபேசி எண்களையும் வாங்கி வருந்து வந்திருக்கின்றனர். அத்துடன் வாக்கு சாவடி வாரியாக பூத் கமிட்டி உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டு அவர்கள் அந்த பகுதியில் உள்ள மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.

திமுகவினர் இந்த தேர்தலில் எப்படியும் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என நினைத்து பணியாற்றி வருகின்றனர். இதற்காக அவர்கள் 238 வாக்கு சாவடிக்கும் பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமித்துள்ளனர். அந்த வகையில் ஒரு பூத்துக்கு 10 கமிட்டி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தினமும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் வந்து வாக்காளர்களை சந்தித்து ஆதரவு கேட்டு வருகின்றனர். அது மட்டும் அல்லாமல் பத்து உதவி பூத் கமிட்டி பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் காலை மற்றும் மாலை வேலைகளில் வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.

இதன் மூலமாக ஒரு பூத்தில் 100 உதவி பூத் கமிட்டி பிரதிநிதிகள் மூலமாக ஆயிரம் வாக்குகளை குறிவைத்து தேர்தல் பணியாற்றி வருகின்றனர். திமுக சார்பாக பத்து ஓட்டிற்கு ஒரு பொறுப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளதால் ஒரு ஓட்டு கூட சிதறாமல் தங்களுக்கு கிடைக்கும் விதமாக தேர்தலில் பணியாற்றி வருகின்றனர். அதேபோல் ஈரோடு கிழக்கில் ஓட்டுரிமை பெற்று திருச்சி, சென்னை, திருப்பூர், கோவை மற்றும் கேரளாவில் வசித்து வருபவர் வருபவர்களையும் செல்போன் வீடியோ கால் மூலமாக தொடர்பு கொண்டு அனைவரும் குடும்பத்துடன் வந்து வாக்களிக்க வேண்டும் என அவர்களிடம் பேசி ஆதரவு திரட்டி வருகின்றனர்.