ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் திமுக மற்றும் அதிமுக செயல்பட்டு வருகிறது. அதன் பிறகு எடப்பாடி தரப்பு வேட்பாளர் கவுண்டர் சமூகத்தை சேர்ந்தவர் என்று கூறப்படும் நிலையில் முதலியார் சமூகத்தின் வாக்குகளை பெற வேண்டும் என்ற முனைப்பில் திமுக ஈடுபட்டுள்ளதாக ஒரு தகவல் வெளி வருகிறது. ஏனெனில் ஈரோடு கிழக்கில் முதலியார் மற்றும் கவுண்டர் சமூகத்தினர் வாக்குகள் தான் அதிகமான அளவுக்கு இருப்பதாகவும், சிறுபான்மையினர் வாக்குகள் கணிசமான அளவுக்கு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் முதலியார் சங்க நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார்.

இதைத்தொடர்ந்து ஈரோடு கிழக்கில் தேர்தல் பணி குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டை என்னிடம் எடப்பாடி பழனிச்சாமி முக்கிய வேலை ஒன்றை கொடுத்துள்ளதாக தகவல் வந்துள்ளது. அதாவது முதலியார் வாக்குகளை கவரும் விதத்தில் முதலியார் சங்க நிர்வாகிகளை சந்தித்து பேசுமாறு செங்கோட்டை எனக்கு எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தி உள்ளாராம். அதன்படி முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் அவர்களை சந்தித்து உங்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று உறுதி கொடுத்துள்ளதாக தகவல்கள் வருகிறது. மேலும் ஈரோடு கிழக்கில் அதிமுக மற்றும் திமுக கட்சிகளுக்கு இடையே தான் பிரதான போட்டி என்று சொல்லப்படுவதால் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.