ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், நாளை மாலை 5 மணியுடன் பிரச்சாரம் நிறைவடைகிறது. இன்று மற்றும் நாளை முதல்வர் ஸ்டாலின் ஈரோடு கிழக்கில் பிரச்சாரம் மேற்கொள்வதாக இருந்த நிலையில் தற்போது அவரின் சுற்றுப்பயணத்தில் திடீர் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதாவது இன்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு செல்கிறார். அங்கிருந்து ஈரோடு கிழக்குக்கு கிளம்பி செல்கிறார்.

முதல்வர் ஸ்டாலின் நாளை அதாவது பிப்ரவரி 25-ஆம் தேதி ஈரோடு கிழக்கில் பிரச்சாரம் செய்கிறார். சக்தி சுகர்ஸ் விருந்தினர் மாளிகையில் இருந்து கிளம்பும் முதல்வர் ஸ்டாலின், காலை 9 மணி அளவில் மஜீத் வீதி, மெட்ராஸ் ஹோட்டல், பேருந்து நிலையம், சக்தி ரோடு, பாரதி தியேட்டர், பெரிய வலசு, சம்பத் நகர் போன்ற பகுதிகளில் வாக்கு சேகரித்து விட்டு காலை 10 மணி அளவில் பவானி ரோடு, மூலக்பட்டறை, காந்தி சிலை, வழி-கேஎன்கே ரோடு போன்ற பகுதிகளில் வாக்கு சேகரிக்கிறார். அதன்பிறகு காலை 11 மணியளவில் அக்ரகாரம் பகுதியில் வாக்கு சேகரித்துவிட்டு சக்தி சுகர்ஸ் விருந்தினர் மாளிகைக்கு சென்று ஓய்வெடுப்பார்.

பின் மாலை 3 மணி அளவில் முனிசிபல் காலனி, முத்து சின்ன வீதி, அம்மு மெஸ் பிரிவு, சம்பத் நகர் போன்ற பகுதிகளில் வாக்கு சேகரித்து விட்டு, மாலை 3.45 மணியளவில் பெரியார் நகர், பன்னீர்செல்வம் பூங்கா, மேட்டூர் நகர் போன்ற பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு விட்டு மீண்டும் சக்தி சுகர் விருந்தினர் மாளிகைக்கு வந்து சிறிது நேரம் ஓய்வெடுப்பார். மேலும் அதன் பிறகு கோவைக்கு சென்று அங்கிருந்து விமான மூலம் மீண்டும் சென்னைக்கு முதல்வர் ஸ்டாலின் திரும்புகிறார்.