தென் அமெரிக்காவில் உள்ள ஈக்வடாரில் அமைந்துள்ள சிறைச்சாலைகளில் அவ்வப்போது கைதிகள் மோதிக் கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர். சில சமயங்களில் இந்த மோதல்கள் மிகப்பெரிய கலவரமாக உருவெடுக்கும் என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஈக்வடார் குவாயாகில் அமைந்துள்ள மத்திய சிறைச்சாலையில் ஏராளமான சிறை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

இங்கு இரு தரப்பினராக கைதிகள் பிரிந்து ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் சமீபத்தில் அது அதிகார போட்டியாக உருமாறி கலவரமாகி உள்ளது. இந்த கலவரத்தில் கைதிகள் கையில் கிடைக்கும் கத்தி கடப்பாறை போன்றவற்றை வைத்து சண்டை போட்டுள்ளனர். இந்த கலவரத்தில் 31 கைதிகள் கொலை செய்யப்பட்டு போலீசார் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இது குறித்த தகவல் அறிந்து விரைந்து வந்த ராணுவத்தினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதனிடையே கலவரத்தை பயன்படுத்திக் கொண்ட கைதிகள் சிலர் சிறையில் இருந்து தப்பி சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.