இந்தியாவில் தடை செய்யப்பட்ட இ சிகரெட்டுகளை விற்பனை செய்யும் 15 இணையதளங்களுக்கு தயாரிப்புகளின் விளம்பரம் மற்றும் விற்பனையை நிறுத்துமாறு மத்திய சுகாதார அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நோட்டீஸ் பெறப்பட்ட 36 மணி நேரத்திற்குள் ஆன்லைன் நிறுவனங்கள் பதிலளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் நோட்டீஸ் அனுப்பப்பட்ட 15 ஆன்லைன் நிறுவனங்களில் நான்கு நிறுவனங்கள் பதிலளித்து தங்கள் செயல்பாடுகளை நிறுத்தி விட்டன. மீதமுள்ள தலங்கள் இன்னும் பதிலளிக்கவில்லை. எனவே பதில் அளிக்க தவறினால் அந்த இணையதளங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எலக்ட்ரானிக் சிகரெட் தடை சட்டத்தின் கீழ் அபராத விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.