இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ நிலவை ஆய்வு செய்வதற்காக சமீபத்தில் சந்திரயான் 3 விண்கலத்தை அனுப்பிய நிலையில் இந்த சோதனை வெற்றி பெற்றது. இந்த வின் படம் நிலவின் தென்துருவத்தில் தரையிறக்கப்பட்ட நிலையில் தற்போது நிலவை ஆய்வு செய்யும் பணியை விண்கலம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் இஸ்ரோ சூரியனை ஆய்வு செய்வதற்காக புதிய விண்கலத்தை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது.

அதாவது சூரியனை ஆய்வு செய்ய இஸ்ரோ குழு ஆதித்யா எல் 1 என்ற விண்கலம் ஒன்றை தயார் செய்துள்ள நிலையில் இந்த விண்கலத்தை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி தளத்திலிருந்து வருகின்ற செப்டம்பர் இரண்டாம் தேதி காலை 11.30 மணிக்கு விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இந்த நிகழ்வை பொதுமக்கள் காணலாம் என இஸ்ரோ அறிவித்துள்ள நிலையில் இதற்கு விருப்பமுள்ளவர்கள் https://lvg.shar.gov.in/VSCREGISTRATION/index.jsp என்ற இணையதளம் மூலமாக ஆகஸ்ட் 29 அதாவது இன்று பகல் 12 மணி முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.