பல்வேறு வங்கிகளும் ஒவ்வொரு வருடமும் டெபாசிட்கான வட்டி விகிதத்தை அதிகரித்து வரும் நிலையில் ஆக்ஸிஸ் வங்கி அதற்கு மாறாக டெபாசிட் வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. அதாவது ஆக்சிஸ் வங்கியில் இரண்டு கோடிக்கும் குறைவாக டெபாசிட் செய்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு 10 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது .மேலும் இந்த புதிய வட்டி வீதம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

அதாவது இரண்டு வருடம் முப்பது மாதம் டெபாசிட்க்கான வட்டி விகிதம் 7.20 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது 7.10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை டெபாசிட்டுக்கு 3.50 சதவீதம் முதல் 7.85% வரை வட்டி வழங்கப்படும். மேலும் 13 மாதங்கள் முதல் 30 மாதங்கள் வரை டெபாசிட் இருக்கு 7.85% வட்டி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.