100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பதிவு செய்தவர்களுக்கு ஊதியம் வழங்க ஆதார் அடிப்படையில் கட்டண முறை பயன்படுத்துவதை மத்திய அரசு தற்போது கட்டாயமாக்கியுள்ளது. அதன்படி 100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்கள் ஆதார் எண்ணை கொண்டு பணம் வழங்கும் திட்டத்தின் கீழ் வருகின்ற ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும். அப்படி இல்லை என்றால் கட்டாயம் ஊதியம் வழங்கப்படாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இரண்டாவது முறையாக கால அவகாசம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதால் இதுவே கடைசி தேதி எனவும் தெரிவித்துள்ளது.