இந்தியாவில் தற்போது தகவல் தொழில்நுட்பத் துறை நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் இந்த இணையம் இல்லாமல் மக்கள் இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது. அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் இணையத்தின் தேவை அதிகரித்துள்ளதால் கடைகளுக்குச் சென்று அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு கூட டிஜிட்டல் முறையில் பணம் மாற்றம் செய்து வருகின்றனர். குறிப்பாக பொது இடங்களில் பணம் பரிமாற்றம் அதிக அளவு நடைபெறுவதால் இதனை கருதி இலவச வைபை வழங்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தின் தொழில்நுட்ப நகரமான பெங்களூருவில் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையம் போன்ற பொது இடங்களில் மக்களுக்கு இலவச வைபை வசதி வழங்குவதற்கு அரசு முடிவு செய்துள்ள நிலையில் நகரம் முழுவதும் குறைந்தது ஐந்தாயிரம் இடங்களில் பொதுவை வசதியை வழங்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.