இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த ஏழாம் தேதி தொடங்கி இன்று வரை 24 நாட்களாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் ஹமாஸ்க்கு ஆதரவாக ஈரான் உள்ளிட்ட நாடுகளும் செயல்படுகின்றன. இதுவரை 9000க்கும் அதிகமானோர் இந்த போரினால் உயிரிழந்த நிலையில் பெண்களும் குழந்தைகளும் அதிகம் பாதிக்கப்படுவதை வலியுறுத்தி போர் நிறுத்த அழைப்பை ஐநாவும் உலக நாடுகளும் வலியுறுத்தின.

ஆனால் இரண்டு தரப்பினரும் இதனை ஏற்க மறுத்து தொடர்ந்து தாக்குதல் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவில் சிக்காகோ மாகாணத்தில் இஸ்ரேல் ஆதரவாளர்களும் பாலஸ்தீனியர்கள் ஆதரவாளர்களும் போராட்டம் மேற்கொண்டுள்ளனர். அப்போது இரண்டு தரப்பினர்களுக்கும் இடையே திடீரென வாக்குவாதம் எழுந்து அது கலவரத்தில் முடிந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.