இஸ்ரேல் ஹமாஸ் இடையே 25வது நாளாக போர் நீடித்து வரும் நிலையில் நேற்று இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் செய்தியாளர்களை சந்தித்து பேசி உள்ளார். அப்போது “போர் நிறுத்தம் தொடர்பான இஸ்ரேலின் நிலைப்பாடு குறித்து தெளிவுபடுத்த விருப்பப்படுகிறேன். எதிர்காலத்திற்காக போராட விரும்புகிறோமா அல்லது பயங்கரவாதத்திற்கு சரண் அடைவோமா என்பதை தீர்மானிக்க வேண்டிய காலம் தான் இது.

இந்தப் போரை தொடங்கியது இஸ்ரேல் கிடையாது. ஆனால் இந்த போரில் கண்டிப்பாக இஸ்ரேல் வெற்றி பெறும். அதுவரை காட்டுமிராண்டிதனத்திற்கு எதிராக இஸ்ரேல் நிற்கும். போர் நிறுத்தத்திற்கான அழைப்புகள் இஸ்ரேல் காட்டுமிராண்டித்தனத்திற்கு சரணடைய வேண்டும், பயங்கரவாதத்திற்கு சரணடைய அடைய வேண்டும், ஹமாஸுக்கு சரணடைய வேண்டும் என்று கூறுவது போல் உள்ளது. ஆனால் அது ஒரு போதும் நடக்காது.

இஸ்ரேல் போரை விரும்பவில்லை, போரை தொடங்கவில்லை. ஆனால் இந்த போரில் கண்டிப்பாக இஸ்ரேல் வெற்றி பெறும். சமாதானத்திற்கும் காலம் உண்டு போருக்கும் காலமுண்டு என பைபிள் சொல்கிறது. இது போருக்கான காலம்” என கூறியுள்ளார்.