காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் இதற்கு பதிலடியாக நேற்று நள்ளிரவு இந்திய ராணுவம் ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலை நடத்தியது. இதில் தீவிரவாதிகள் முகாம்கள் மட்டும் குறி வைத்து தாக்கப்பட்ட நிலையில் ஏராளமான தீவிரவாதிகள் உயிரிழந்ததோடு பலர் காயமடைந்தனர்.

‌இந்தியாவின் முப்படைகளும் ஒன்றிணைந்து தாக்குதல் நடத்திய நிலையில் இந்திய அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் மக்கள் அனைவரும் வரவேற்று வருகிறார்கள். அந்த வகையில் ஆந்திர துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாணும் இந்திய ராணுவத்தின் நடவடிக்கையை வரவேற்றுள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது,

இந்தியா இஸ்ரேலை பின்பற்றி பயங்கரவாதத்தை முழுமையாக ஒழிக்க வேண்டும். இந்த பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு இதுதான் சரியான நேரம். இஸ்ரேல் எப்படி பயங்கரவாதத்திற்கு எதிராக துணிவான நடவடிக்கை எடுக்கிறதோ அதே போன்று நாமும் எடுக்க வேண்டும். மேலும் பயங்கரவாதத்தை முற்றிலுமாக வேறருப்பது அவசியம் என்று கூறியுள்ளார்.