
இஸ்ரேல் மீது கமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்திய நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாலஸ்தீனத்தில் உள்ள காசா மீது இஸ்ரேல் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலால் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். உணவு உடை உள்ளிட்ட அத்யாவசிய தேவைகள் காசாவில் அதிகரித்துள்ள நிலையில் பல்வேறு நாடுகளும் மனிதாபிமான உதவிகளை செய்து வருகிறது. சமீபத்தில் இஸ்ரேல் காசாவில் மனிதாபிமான உதவிகளை நிறுத்த முடிவு செய்ததாக தகவல் ஒன்று வெளிவந்தது.
அதாவது காசா மக்களை பட்டினி போட இஸ்ரேல் முடிவு செய்ததாக கூறப்பட்ட நிலையில் அதற்கு அமெரிக்காவே கண்டனம் தெரிவித்தது. அதாவது காசாவில் மனிதாபிமான உதவிகளை அதிகரிக்காவிட்டால் இஸ்ரேல் ராணுவத்துக்கு அமெரிக்கா உதவி செய்யாது என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்தியா போரில் நடுநிலையாக இருக்கும் நிலையிலும் சமீபத்தில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் போன்ற நாடுகளுக்கு சென்று வந்தார். ஆனால் அமெரிக்காவின் நம்பகத்தன்மைக்காக இஸ்ரேலுக்கு இந்தியா ஆதரவு கொடுப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் உட்பட சிலர் கூறியிருந்த நிலையில், இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் அனுப்புவதற்கும் இந்தியாவுக்கு கண்டனம் எழுகிறது.
இந்நிலையில் தற்போது பாலஸ்தீனத்தில் உள்ள காசா மக்களுக்காக இந்தியா நிவாரண உதவிகளை அனுப்பியுள்ளது. அதன்படி ஐநா நிவாரண பணிகள் மூலமாக இந்தியா சார்பில் மனிதாபிமான உதவிகள் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி சுமார் 30 டன் மருந்துகள் மற்றும் உணவுகள் போன்றவைகள் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இன்று மனிதாபிமான உதவிகள் அனுப்பப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான தகவலை பாஜக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்
ஸ்வால் எக்ஸ் தக்கத்தில் பகிர்ந்துள்ளார்.