நடிகர் ஆர்யா கடந்த 2005 ஆம் வருடம் அறிந்தும் அறியாமலும் திரைப்படம் வாயிலாக நடிகராக அறிமுகமானார். இதையடுத்து அவர் உள்ளம் கேட்குமே, நான் கடவுள், பாஸ் என்ற பாஸ்கரன், மதராசபட்டினம், சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கடந்த ஆண்டு அவர் நடிப்பில் கேப்டன் திரைப்படம் வெளியாகியது.

எனினும் அதற்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. இதனிடையே ஆர்யா நடிப்பது மட்டுமின்றி ஹோட்டல் தொழிலும் செய்து வருகிறார். அவருக்கு சொந்தமாக Sea Shell, Zaitoon போன்ற ஹோட்டல்கள் உள்ளது. அரேபியன் டிஷ்கள் ஸ்பெஷலான அந்த ஹோட்டல்களை சென்ற 45 ஆண்டுகளாக ஆர்யா குடும்பம் நடத்தி வருகிறது.

இதற்கிடையில் ஆர்யாவினுடைய மொத்த சொத்து மதிப்பானது ரூ.80 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது. இவரது வீட்டின் புகைபடங்கள் பல வருடங்களுக்கு முன்னதாகவே வெளியாகி இருக்கிறது. அதோடு இவர் பல சொகுசு கார்களை வைத்துள்ளார். அவரது Audi-Q7 கார் மட்டும் சுமார் 1 கோடி ரூபாய் விலைக்கொண்டது. அத்துடன் Benz E Class காரின் விலையானது சுமார் 70 லட்சம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.