இந்தியாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் சோனு சூட். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், பாலிவுட் போன்ற பல மொழிகளில் நடித்து வருகிறார். திரை உலகில் பிசியான நடிகராக சோனு சூட் வலம் வருகிறார். இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள கிஸ்மத் அரபு மண்டி என்ற உணவகத்தில் இந்தியாவின் மிகப்பெரிய தட்டு ஒன்று செய்யப்பட்டுள்ளது.

இதற்கு நடிகர் சோனு சூட்டின் பெயரை சூட்டியுள்ளனர். மேலும் இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய தட்டுக்கு நடிகர் சோனு சூட்டின் பெயர் சூட்டப்பட்டது  மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு அவருக்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது.