
வெள்ளத்தில் தவிக்கும் நாய் ஒன்றை இரண்டு வாலிபர்கள் ஏணி உதவியோடு மீட்கும் வீடியோ காட்சியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு பெரிய தடுப்பனையின் மதகை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதனால் நாய் ஒன்று வெள்ளத்தை கடந்து வர முடியாமல் பரிதவித்தபடி நிற்கிறது. தடுப்பணையின் கரையில் ஏராளமானவர்கள் கூடி நின்று அதை வேடிக்கை பார்க்கிறார்கள் .
அப்போது இரண்டு வாலிபர்கள் மட்டும் துணிச்சலாக ஒரு ஏணியுடன் வெள்ளத்தில் நடந்து வருகிறார்கள். தாழ்வான பாறை பகுதிக்குள் ஏணியை பாலம் போல வைத்து நாயைப் பிடித்து ஏணியில் ஏற்றி வெள்ளத்தைக் கடக்கிறார்கள். இந்த வீடியோ சுமார் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்வையிட்டுள்ளனர். இந்த நாயை துணிச்சலாக வெள்ளத்தில் இருந்து மீட்ட வாலிபர்களின் நிஜ ஹீரோக்கள் என்று பலரும் பாராட்டி வருகிறார்கள்.
View this post on Instagram