தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதற்கான பணிகளை தற்போது அரசு தீவிரமாக மேற்கொண்டு வரும் நிலையில் இந்த உரிமை தொகை பெறுவதற்கு தகுதியுள்ள நபர்களின் பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டது.

அதன் அடிப்படையில் தான் விண்ணப்பங்களும் பெறப்பட்ட நிலையில் தற்போது ஒரே ஆண்டில் 3600 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு மகளிர் உரிமை தொகை ஆயிரம் ரூபாய் கிடையாது என்ற புதிய தகவல் வெளியாகி உள்ளது. மின்வாரிய அலுவலகம் மூலமாக நுகர்வோரின் பட்டியல் தற்போது எடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை 2020 ஆம் ஆண்டிலிருந்து 2023 ஆம் ஆண்டு வரை எடுக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.