சமூக வலைத்தளங்களில் வைரலாக வேண்டும், லைக்குகள் மற்றும் வியூஸ்களைப் பெற வேண்டும் என்ற வெறி இன்றைய இளைஞர்கள் மத்தியில் பெரும் ஆபத்தாக உருவெடுத்துள்ளது.

இதன் காரணமாக, பல இளைஞர்கள் தங்களுடைய உயிரையும் மற்றவர்களின் உயிரையும் பணயம் வைத்து ஆபத்தான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோவில், அதிவேகமாகச் சென்ற ஆட்டோ ஒன்றின் மீது ஒரு வாலிபர் மிகவும் ஆபத்தான முறையில் ஸ்டண்ட் செய்கிறார்.

“>

இதனால் பொதுவெளியில் போக்குவரத்து விதிகளை முற்றிலும் மதிக்காமல் சாகசத்தில் ஈடுபட்ட அந்த நபர், எதிர்பாராதவிதமாக சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த ஒரு முதியவர் மீது பலமாக மோதி விபத்தை ஏற்படுத்துகிறார்.

இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பார்ப்பவர்களின் ரத்தத்தைக் கொதிக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது. வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்களது கடுமையான கண்டனங்களையும் ஆத்திரத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

மேலும் சில நொடிகள் புகழுக்காகவும், சமூக ஊடகப் பாராட்டுகளுக்காகவும் மற்றவர்களின் உயிருக்கு ஆபத்து விளைவிப்பது எந்த விதத்தில் நியாயம் என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், சட்டத்தை மீறி பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திய அந்த ஆட்டோ ஓட்டுநர் மற்றும் ஸ்டண்ட் செய்த வாலிபர் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் வலியுறுத்தி வருகின்றனர்.