
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர்தான் மணிமேகலை. இந்த ஷோவில் விஜே பிரியங்காவுடன் ஏற்பட்ட சண்டையின் காரணமாக அந்த தொலைக்காட்சியில் இருந்து வெளியேறினார் . தற்போது ஜீ தமிழில் பணியாற்றி வருகிறார். அங்கு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் மணிமேகலை தற்போது சென்னையில் மிகப்பெரிய தொகை கொடுத்து சொகுசு அப்பார்ட்மெண்ட் ஒன்றை வாங்கி உள்ளார்.
அவ்வப்போது சமூக வலைதளங்களில் வீடியோக்களையும், போட்டோக்களையும் வெளியிட்டு வரும் மணிமேகலை தற்போது அந்த சொகுசு அப்பார்ட்மெண்டிற்கான சாவி வாங்கியதை போட்டோவாக தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் விரைவில் அந்த வீட்டின் Home Tour வீடியோவை வெளியிடப் போவதாகவும் கூறியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இவர்கள்தான் நிஜ சூரிய வம்சம் ஜோடி என்று பாராட்டி வருகிறார்கள்.
View this post on Instagram