குஜராத் மாநிலம் குறித்து தான் வைத்திருந்த எண்ணம் முற்றிலும் தவறு என மகாராஷ்டிராவைச் சேர்ந்த பெண் ஒருவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ள வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

மகாராஷ்டிராவிலிருந்து குஜராத் சென்ற அந்தப் பெண், அங்கு ஒரு உணவு கடை (Food Stall) தொடங்கியுள்ளார். ஆரம்பத்தில் மற்ற மாநிலத்தைச் சேர்ந்த தமக்கு அங்கு ஆதரவு கிடைக்குமா என அவர் தயங்கிய நிலையில், குஜராத் மக்கள் காட்டிய அன்பு மற்றும் ஆதரவு அவரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by india (@indicore.in)

“நான் குஜராத் மக்களை குறைத்து மதிப்பிட்டு விட்டேன், ஆனால் இப்போது அவர்கள் மீது எனக்கு அளவற்ற மரியாதை ஏற்பட்டுள்ளது” என அவர் உருக்கமாகப் பேசியுள்ளார்.

இந்தப் பெண்ணின் கடைக்கு மக்கள் கூட்டம் அலைமோதுவதைப் பார்த்த நெட்டிசன்கள், “இந்தியாவின் ஒற்றுமைக்கு இதுவே சான்று” எனப் பாராட்டி வருகின்றனர்.