திருமணம், விவாகரத்து, ரியாலிட்டி ஷோக்கள் என பல்வேறு சர்ச்சைகளில் இருந்து மீண்ட வனிதா விஜயகுமார், தற்போது இயக்குநராக களமிறங்கியுள்ளார். “மிஸஸ் அண்ட் மிஸ்டர்” என்ற படத்தின் மூலம், இயக்கும் பொறுப்பை தவிர, கதாநாயகியாகவும், கதையாசிரியராகவும், திரைக்கதை, வசனம் என அனைத்தையும் முழுமையாக செய்துள்ளார்.

இந்த படத்தில் பிரபல நடன இயக்குநரான ராபர்ட் ஹீரோவாக நடித்துள்ளார்.  இப்படம் வெளியான 2 நாட்களில் விமர்சனங்கள் இணையத்தில் பரவ ஆரம்பித்தன. குறிப்பாக, இதில் அடல்ட் காட்சிகள் அதிகம் உள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதற்கிடையில், மைக்கேல் மதன காமராஜன் படத்தில் இடம்பெற்ற, இளையராஜா இசையமைத்த “ராத்திரி சிவராத்திரி தூக்கம் போச்சு” என்ற பாடல், வனிதா இயக்கிய படத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த பாடலை பயன்படுத்த இசைஞானி இளையராஜாவிடம் வனிதா, தனது மகள் ஜோவிகாவுடன் நேரில் சென்று அனுமதி கேட்டதாகவும், அவரும் அதற்கு ஒப்புதல் அளித்ததாகவும் வனிதா கூறியிருந்தார்.

இந்நிலையில், இளையராஜா தனது பாடலை அனுமதியின்றி பயன்படுத்தியதாக கூறி, வனிதா விஜயகுமாரின் படத்திற்கு எதிராக வழக்குப் பதிவு செய்யவுள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. இதனால் மனமுடைந்த வனிதா, “இளையராஜா தெய்வம் மாதிரி. அந்த தெய்வமே என் மீது கோபப்பட்டா நான் எங்கே போவேன்?” எனக் கூறி உணர்ச்சியை வெளிப்படுத்தினார். மேலும், “நான் இளையராஜா வீட்டுக்கு மருமகளாக போயிருக்க வேண்டியவள்தான்” எனக் கூறியதுதான் பரபரப்புக்குக் காரணமானது.

வனிதாவின் இந்த அறிக்கையால், பலரும் “இளையராஜாவுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள்தான் இருக்கிறார்கள். அவர்களில் யாருடனும் வனிதாவுக்கு காதல் தகவலோ, திருமண தகவலோ வரலையே” எனக் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

இதுகுறித்து, இளையராஜாவின் தம்பி மற்றும் இசையமைப்பாளரான கங்கை அமரனை ஒரு பத்திரிகையாளர் தொடர்பு கொண்டு பேசினார். அதற்கு அவர், “அப்படி எல்லாம் எதுவுமே இல்லை. இந்தப் பெண் ஏன் இப்படி பேசுகிறாரோ தெரியவில்லை. ஏதோ தவறாக இருக்கிறது.” என்று கூறியுள்ளார். இதனால், வனிதா வெறும் “கவுண்ட் கொடுத்துட்டாங்களா?” என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.