
தென்னிந்திய சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவர் தற்போது விடுதலை என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் சூரி ஹீரோவாக நடிக்க முக்கிய வேடத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகும் நிலையில் முதல் பாகத்தின் சூட்டிங் தற்போது முடிவடைந்துள்ளது. இந்நிலையில் விடுதலை திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வருகிற 8-ம் தேதி வெளியாகிறது.
இந்தப் பாடலை இளையராஜா இசையில் முதன்முதலாக தனுஷ் பாடியுள்ளார். மேலும் ஃபர்ஸ்ட் சிங்கிள் 8-ம் தேதி ரிலீஸ் ஆகும் என்பதை படக்குழு தற்போது சிறிய ப்ரோமோவுடன் அறிவித்துள்ளது. இந்த ப்ரோமோ வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.
.@ilaiyaraaja & @dhanushkraja creates magic in #Onnodanadandhaa
Full song out on Feb 8th, here’s a sneak peak into the recording session. #Viduthalai part 1#Vetrimaaran @VijaySethuOffl @sooriofficial @rsinfotainment @SonyMusicSouth @mani_rsinfo pic.twitter.com/BWNIr0xHTt
— Red Giant Movies (@RedGiantMovies_) February 6, 2023