இந்திய சினிமாவின் ‌முதல் திரைப்படம் ராஜா ஹரிச்சந்திரா. இந்த படம் கடந்த 1913-ம் ஆண்டு மே 5-ம் தேதி ரிலீஸ் ஆனது. இது ஒரு அமைதி படம். கடந்த 1931-ம் ஆண்டு மார்ச் மாதம் 17-ஆம் தேதி முதன்முதலாக பேசும் படமான ஆலம் ஆரா என்ற படம் பாலிவுட்டில் ரிலீஸ் ஆனது. கடந்த 1931-ம் ஆண்டு அக்டோபர் 31-ஆம் தேதி முதன் முதலில் தமிழில் பேசும் படமாக காளிதாஸ் வெளியானது. இந்நிலையில் கடந்த 1932-ம் ஆண்டு பிப்ரவரி 6-ம் தேதி தெலுங்கு சினிமாவில் முதன்முதலாக பேசும் படமாக பக்த பிரகலாதா என்ற படம் ரிலீஸ் ஆனது.

இந்த படத்தை எச்.எம் ரெட்டி இயக்க அர்தேஷிர் இராணி தயாரித்திருந்தார். இந்த படம் ரிலீசாகி 91 வருடங்கள் நிறைவு பெற்ற நிலையில் தற்போது தெலுங்கு சினிமாவுக்கு 92-வது வருடம் பிறந்துள்ளது. மேலும் தெலுங்கு சினிமாவில் சமீபத்தில் வெளியான பாகுபலி, ஆர்ஆர்ஆர் போன்ற திரைப்படங்கள் உலக அளவில் நல்ல வெறுப்பை பெற தெலுங்கு திரை உலகில் பல திறமை வாய்ந்த இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.