நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) வரலாற்றுச் சாதனை படைத்துள்ள நிலையில், அக்கட்சியின் வெற்றியைப் பற்றி பிரபல சண்டைப்பயிற்சி இயக்குநர் பெப்சி விஜயன் அதிரடியாகப் பேசியுள்ளார். “ஆரம்பத்தில் வெறும் ரசிகர்கள் கூட்டம் மட்டும்தான் என்று த.வெ.க-வை கேலி செய்தார்கள்; இவர்களோடு இருக்கும் இளைஞர்களை எப்படியெல்லாம் வாய்க்கு வந்தபடி திட்டினார்கள்” என்று பழைய விமர்சனங்களை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

​ஆனால், அந்த விமர்சனங்களுக்கெல்லாம் இன்று தமிழக இளைஞர்கள் ஓட்டு வடிவில் தகுந்த பதிலடி கொடுத்துள்ளதாக அவர் பெருமிதப்பட்டுள்ளார். “அன்று திட்டப்பட்ட அதே இளைஞர்கள், இன்று தமிழகத்திற்கு ஒரு சரியான முதலமைச்சரை அரியணையில் உட்கார வைத்துவிட்டார்கள்” என்று பெப்சி விஜயன் உணர்ச்சிப் பெருக்குடன் பேசியுள்ளார். திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை உடைத்து த.வெ.க ஆட்சியைப் பிடித்துள்ள இந்த வேளையில், சினிமா பிரபலத்தின் இந்த ஓப்பன் டாக் அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.