மத்திய அரசின் PMIS அதிகாரப்பூர்வ போர்ட்டலில் PM இன்டர்ன்ஷிப் திட்டம் 2025 க்கான ஆன்லைன் பதிவு படிவத்தைத் திறந்துள்ளது. இதில் விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மாணவர்கள் pminternship.mca.gov.in ஐப் பார்வையிடலாம். வேலைவாய்ப்பில்லாத இளைஞர்களுக்கு சுமார் 500 முக்கிய நிறுவனங்களில் பயிற்சியோடு மாதம் 5000 ரூபாய் உதவி தொகை வழங்கப்படுகிறது. 12 மாத பயிற்சிக்கு பிறகு 6 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தில்  10, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அல்லது இளங்கலை பட்டம், ஐடிஐ அல்லது பிற தொழில்நுட்ப டிப்ளோமா பெற்ற 21 முதல் 24 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பிரதான் மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டத்திற்கு விண்ணப்பிக்க ஒரு பொன்னான வாய்ப்பு உள்ளது. விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 12 ஆம் தேதி ஆகும்.  இதற்கு எப்படி விண்ணப்பிக்கலாம் என்பது குறித்து பார்க்கலாம்.

விண்ணப்பிப்பது எப்படி..?

முதலில் pminternship.mca.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும். ‘PM இன்டர்ன்ஷிப் திட்டம் 2025 பதிவு படிவம்’ என்ற இணைப்பிற்குச் செல்லவும். உங்களைப் பதிவுசெய்து உள்நுழைவு சான்றுகளை உருவாக்குங்கள். போர்டல் வழங்கிய வழிமுறைகளின்படி விவரங்களை கவனமாக நிரப்புவதன் மூலம் விண்ணப்ப படிவத்தை நிரப்பவும். PM இன்டர்ன்ஷிப் திட்டம் 2025 விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பித்து, எதிர்காலக் குறிப்புக்காக அதை வைத்துக் கொள்ளுங்கள். இதற்கு ஆதார் அட்டை கல்விச் சான்றிதழ்,  சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம்  ஆகியவை அவசியம்.