மதுரை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவை ஒருங்கிணைந்து  1 லட்சம் பேர் பங்கேற்கும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஒன்றை நடத்த உள்ளன. இது தொடர்பாக, முன்னேற்பாடு பணிகளை  குறித்த ஆய்வுக்கூட்டமானது நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

தமிழகத்தில் படித்த இளைஞர்கள் வேலை இல்லாமல் இருக்கின்றனர் என்ற சொல்லே இருக்கக்கூடாது என்ற நோக்கத்தோடு முதல்வர் ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் வீரராகவ ராவ், கலெக்டர் அனிஷ்சேகர் ஆகியோர் அக்கூட்டத்திற்கு முன்னிலை வகித்தனர்.

மேலும் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதையடுத்து மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜீத் சிங், கூடுதல் கலெக்டர் சரவணன், வெங்கடேசன் எம்.எல்.ஏ, மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குனர் சண்முகசுந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்திற்கு பின் அமைச்சர்கள் மூர்த்தி, கணேசன் ஆகியோர் கூறியுள்ளதாவது, மதுரை மாவட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு மாபெரும் தனியார் துறையின் நிறுவனங்கள் மூலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதற்கான தேதியானது பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.

மேலும் வடமாநிலத்தில் இருந்து ஒப்பந்த அடிப்படையில் தமிழகத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தொழிலாளர்களில் தமிழக தொழிலாளர்கள், வடமாநில தொழிலாளர்கள் என எந்த வேற்றுமையும் பார்க்கவில்லை. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.