ராஜஸ்தான் மாநிலம் பச்பத்ராவில், காதல் திருமணம் செய்து கொண்டு, சமீபத்தில் வீடு திரும்பிய இளம்பெண்ணை, அவரது சொந்த குடும்பத்தினர் கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.

முதலில் இந்த காணொளி வெளியான நிலையில் சிறுமி கடத்தப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் அதன் பிறகு காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் குடும்பத்தினர் தான் அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனர் என்று தெரியவந்தது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.